புதிய அரசியலமைப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களை தௌிவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
வார இறுதி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.
இதில் தனிநபர் அல்லது குழுக்களின் நலன்களை விட நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த அரசியலமைப்பின் சாதக பாதகங்கள் எதுவும் சரிவரத் தெரியாத நிலையிலேயே மகாநாயக்க தேரர்கள் அதனை எதிர்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
எனவே புதிய அரசியலமைப்பு குறித்து அவர்களைத் தௌிவூட்ட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.