பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் இன்று காலை புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகயிரதம் மீது பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
அவரது சடலம் பம்பலப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.