வவுனியா தெற்கு, சிங்களப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்கள், புகைத்தல் பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விகாராதிபதிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதைப் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.