பிலாண்டர் வேகத்தில் சுருண்டது இலங்கை: நிதானமாக ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணி
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பிலாண்டரின் வேகத்தில் இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.
ஆரம்பத்திலே தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்களுடைய வேகத்தை கூட்ட ஆரம்பித்தனர். அதன் படி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இலங்கை அணி வீரரான தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்கள் குவித்த போது பிலாண்டர் வேகத்தில் வீழ்ந்தார்.
அதைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களும், ஏஞ்சலா மேத்யூஸ் 39 ஓட்டங்களும் குவித்தனர்.
தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 5 விக்கெட்டுகளும், அபாட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
சற்று முன் வரை தென் ஆப்பிரிக்கா அணி 39 ஓட்டங்கள் எடுத்து விக்கெட் எதுவுமின்றி 120 ஓட்டங்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.