பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான நிகழ்வு இதுதான்
பிரித்தானிய நாட்டில் கடந்த 1947-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 1947ம் ஆண்டு மார்ச் மாதம் இதுவரை இல்லாத வகையில் 1.5 மீற்றர் ஆழத்திற்கு பனி மழை பொழிந்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்கள் அனைத்தும் பனி மற்றும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
இதன் விளைவாக, 3 லட்சம் ஹெக்டேர் பரபரப்பளவு கொண்ட பகுதிகள் நகரங்கள் அனைத்தும் வெள்ளதால் மூழ்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
Nottinghamshire நகரில் 14,000 வீடுகள் Maidenhead நகரில் 1,400 வீடுகள், Oxford நகரில் 3000 வீடுகள் Windsor நகரில் 1350 வீடுகள் என அனைத்தும் முற்றிலுமாக அழிந்து போனது. சில நகரங்களில் கற்பனையில் எண்ண முடியாத விளைவுகளும் ஏற்பட்டது.
இதுமட்டுமில்லாமல், 45,000 வர்த்தக கட்டிடங்கள், 7,000 தொழில்கள் என முற்றிலுமாக நாசமடைந்தது.
அதே சமயம், நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளால் 2,76,000 வியாபார ஸ்தாபனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஹெக்டர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகின. லட்சக்கணக்கான மக்கள் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை என்பது பெரும் துயரமாகும்.
இயற்கை சீற்றத்தால் நிகழ்ந்த் இந்த வெள்ளத்தால் சுமார் 12 மில்லியன் பவுண்ட்(தற்போதைய மதிப்பு 300 மில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இழப்புகளை மதிப்பிட்டபோது சுமார் 4.5 பில்லியன் பவுண்ட் வரை அரசுக்கு தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.