அரசு முறை பயணமாக பிரித்தானியா விஜயம் செய்யவிருக்கும் ஜனாதிபதி டிரம்ப், ராணியுடன் அவரது தங்க ரதத்தில் பயணப்பட ஆசை தெரிவித்துள்ளாராம்.
பிரித்தானியாவில் அரசு முறை பயணமாக விஜயம் செய்யும் தலைவர்கள் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் அவரது தங்க ரதத்தில் அழைத்து செல்லப்படுவது வழக்கம்.
இதே வழக்கத்தை தமக்கும் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குறித்த சவாரிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் பக்கம் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வெளியாகவில்லை.
காரணம் குறித்த வாகனமானது எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் அற்றது. மட்டுமின்றி ராக்கெட்-இணைக்கப்பட்ட எறிகுண்டு தாக்குதலுக்கு கூட பயங்கரமான சேதத்தை ஏற்படுத்த முடியும் என பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அமெரிக்க வெள்ளை மாளிகை தொடர்ந்து இதே விடயத்தை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ராணியுடன் பயணப்படும் பகுதி மொத்தமும் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் கடினமான விடயம் என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி டிரம்பின் வருகையை ஒட்டி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவானது ஏற்கெனவே பாதுகாப்பு சிக்கல் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளர். இதனால் Balmoral பகுதியில் அமைந்துள்ள ராணியாரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக சீனா ஜனாதிபதி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டவர்கள் இதேபோன்று ராணியாருடன் தங்க ரதத்தில் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.