பிரித்தானியா பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், அந்நாட்டின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் மதிப்பு 20 சதவீதமாக குறைந்துள்ளது. அது போல, யூரோவுக்கு எதிரான பவுண்ட் மதிப்பும் கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணத்தால் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய மக்கள் இந்த ஆண்டு அந்த சுற்றுலாவை புறக்கணித்துள்ளனர்.
ஏனெனில், பிரித்தானியாவை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூயோர்க்கில் உள்ள Empire State Building சென்றபோது அவர்கள் செலுத்திய தொகை 75 பவுண்ட் ஆகும். ஆனால் இந்த ஆண்டு இதற்கான தொகை 94 பவுண்ட் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் பிரித்தானியாவை சேர்ந்த 150,000 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷொப்பிங் செய்வதற்காக நியூயோர்க் செல்வார்கள். மேலும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு 300,000 பேர் Canary தீவிற்கு சூரிய குளியல் எடுப்பதற்காக தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வார்கள்.
ஆனால், பவுண்ட் விலை சரிவால், அந்நாட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரம் கருதி இதுபோன்ற சுற்றுலாக்களை புறக்கணித்துள்ளனர்.