பிரித்தானியாவில் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்புவதாக தெரசா மே கூறியுள்ள நிலையில் அவர்களை அதிகளவில் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. அகதிகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியவுக்கு விரைவில் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமர் தெரசா மே தான் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்பவர்களை குறைப்பதே தனது உறுதியான நிலைபாடு என கூறினார்.
இதனால் தெரசா மே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பிரித்தானியாவுக்கான ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Gonzalo Vargas, பிரித்தானியா வருடத்துக்கு 10,000 அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்.
கடந்த வருடத்தில் மட்டும் 13000 புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் இங்கு கைதாகியுள்ளார்கள்.
இது தவறு என Gonzalo கூறியுள்ளார். இப்படி கைதாகிறவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், அது அவர்கள் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் என கூறியுள்ளார்.
இங்கு வரும் புலம்பெயர்பவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிய மற்றும் சேருவதற்கான கட்டுபாடுகளை தெரசா மே தளர்த்த வேண்டும் எனவும் Gonzalo கூறியுள்ளார்.