பிரித்தானியாவில் நடு வீதியில் நடந்த கொடூரம்: உடைந்த போத்தலால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இளைஞன்
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தின இறுதிவாரத்தின் போது இளைஞர் ஒருவர் உடைந்த போத்தல் கொண்டு மற்றொரு இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வரும் வேளையில் பிரித்தானியாவில் பொதுமக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தற்போதில் இருந்தே கொண்டாட துவங்கி விட்டனர்.
வாரத்தின் விடுமுறை நாட்களிலும் வெளியே சென்று வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவின் Manchester நகரில் உள்ள Princess Street என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி அளவில் மூன்று இளைஞர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்று இரவு அந்த வீதி கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தால் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது குறித்த இளைஞர் ஒருவரை, ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு மற்றொருவர் உடைந்த பாட்டில் கொண்டு முகம் மற்றும் உடல்களில் குத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த அனைவரும் பதற்றமடைந்து கூச்சலிட்டுள்ளனர்.
அதன் பின் அவர் உடனடியாக எழுந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தில் ஏறிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பெரிதாக காயங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதைக் கண்ட ஒருவர் தாக்கப்பட்ட நபரின் கண் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிக அளவு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், தாக்கிய நபரை தேடிவருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது தங்களுக்கு உடனடியாக தகவலை தெரிவிக்கும் படி 0800 555 111 என்ற தொலைப்பேசி எண்ணை பகிர்ந்து சென்றுள்ளனர்.