பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 1300 பேர்..! தமிழர்களுக்கு ஆபத்தா..?
இன்று உலகில் பல பாகங்களிலும் இடம்பெறும் அசாதாரண நிலமையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பலரும் அகதிகளாக படையெடுத்துள்ளனர்.
குறிப்பாக இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளை இலக்கு வைத்து அதிகளவான மக்கள் அகதிகளாக பயணிக்கின்றனர்.
அண்மைய காலமாக சிரியா, ஆப்கானிஸ்தான், மேற்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் அங்கு நிலவும் அசாதாரண நிலைமையின் காரணமாக குறித்த நாடுகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமான முறையில் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு குறித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்த நிலையில், தற்போது குடியேறிய நாடுகளில் குடியுரிமையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், குடியேற்ற நாடுகளில் தற்போது குடியுரிமை தொடர்பான சட்டத் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது குடியேறிகளுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த வெளிநாட்டவர்கள் தற்போது அங்கு பாரிய மற்றும் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் ரீதியில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, பாரிய மற்றும் கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு கடத்தப்படுவது வழமையான நடவடிக்கையாக இருந்து வருகின்றது.
எனினும், பிரித்தானியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை காரணம் காட்டி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 356ஆம் பிரிவு சட்டம் குற்றவாளிகளுக்கு சாதக தன்மையுடன் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதாவது, இந்த சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளின் குடும்பத்தினர் பிரித்தானியாவில் இருந்தால், மனித உரிமைகளின் அடிப்படையில் அவர்கள் நாடு கடத்தப்படமாட்டார்கள்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகள் பலர் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்வதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அந்நாட்டில் வசிக்கும் பலரின் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், நாடு கடத்தப்படுவதிலிருந்து ஒரு சிலர் விடுபடுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
அண்மையில் பெண் ஒருவரை கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சோமாலிய நாட்டவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், குறித்த நபர் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கு முயற்சித்த போதிலும், அந்நாட்டு நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்வில்லை.
பிரித்தானியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவது சரியான ஒன்று என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பிர் ஒருவரும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே பிரித்தானியாவில் பாரிய குற்றச் செயல்களின் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அண்மைய நாட்களில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பிரான்சில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை தமிழர்கள் மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் சுவிட்ஸர்லாந்தில் ஒருவரை கொலை செய்தமைக்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டமை என அண்மைய நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கணிசமான இலங்கை தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுமா என்பது கேள்விக்குறியே…!