யூத குடும்பம் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், நேற்று வெள்ளிக்கிழமை ஐந்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
செந்தனியில் கடந்த செப்டம்பர் மாதம் யூத குடும்பம் ஒன்று கடத்தப்பட்டு குடும்ப நபர்களை வெவ்வேறு இடங்களில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கிய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். குறித்த ஐவரும், முன்னதாக ஆயுதமுனையில் கொள்ளை, ஆட்களை கடத்தி மிரட்டுவது என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களில் மூவர் இளைஞர்கள் எனவும், ஏனைய இருவரும் 50 வயதுகளையுடைவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூத குடும்பத்தினரை கடத்தில் பணம் பறித்துள்ளனர். அப்போது உள்துறை அமைச்சர் Gerard Collomb தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். ‘இது தீவிர இனவாதம். இது கொடூரமான ஆக்கிரமிப்பு!’ என குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைகளில், கடத்தல்காரர்கள் யூத குடும்பத்தினரிடம் ‘நீங்கள் யூதர்கள். எனவே உங்களிடம் பணம் இருக்கும். அதை தாருங்கள்!’ என அடித்து மிரட்டியதாக தெரியவந்துள்ளது. தற்போது பொபினி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இவர்கள், விரைவில் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.