சீனாவை சேர்ந்த ஆகுதி ஒருவர் பாரீஸில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் பாரீஸில் சீனாவை சேர்ந்த Shaoyo Liu (56) என்னும் நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பொலிசார் Liu வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது Liu வீட்டுக்கு பொலிசார் சென்ற போது, அவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு பொலிசை மிரட்டியுள்ளார்.
இதில் நடந்த தகராறில் Liu -வை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர், ஆனால் Liu வீட்டில் மீன்களை அறுக்கவே கத்தியை கையில் வைத்திருந்தார் என ஒரு தகவல் உலா வருகிறது.
இதனிடையில், பிரான்ஸ் பொலிசார் வேண்டுமென்றே Liuவை கொன்று விட்டதாக கூறி சீனாவை சேர்ந்த ஆகுதிகள் கூட்டமாக பொலிஸ் நிலையம் முன்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அவர்கள் பொலிசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதன்போது வன்முறையிலும் ஈடுபட்டதால் பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதனிடையில் உண்மை விரைவில் வெளிவரும் எனவும் விசாரணை நடந்து வருவதாகவும் பிரான்ஸ் வெளியுறவு துறை அறிவித்துள்ளது.