பிரான்சை கதிகலங்க வைத்த முகமுடி நபர்கள்: பொலிஸ் அதிரடி
பிரான்சில் மூன்று மர்ம நபர்கள் முகமுடி அணிந்து ஆயுதங்களுடன் அராஜகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரத்தின் 13வது மாவட்டத்தில் இரண்டு கார்கள் மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான கார் ஓட்டுநர் விபத்தை குறித்த விளக்க விரும்பி மற்றொரு காருக்கு அருகில் சென்றுள்ளார். அப்போது, அந்த காரில் முகமுடி அணிந்து துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபர் அவரை மிரட்டியுள்ளான்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்தை அடுத்து மற்றொரு காரில் முகமுடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மூன்று மர்ம நபர்கள் அப்பகுதியிலிருந்து அராஜகத்துடன் கிளம்பியுள்ளனர்.
தகவலறிந்த பொலிசார் அவர்கள் காரை துரத்தி சென்றுள்ளனர். இறுதியில் மர்ம நபர்கள் அவர்கள் பயணித்த காரை தீயிட்டு எரித்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
இறுதியில் பொலிசார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகாரித்து வருவதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.