பிரபுதேவா ஜோடியாகிறார் லட்சுமிமேனன்
தமன்னாவுடன் பேய் படத்தில் நடித்த பிரபுதேவா அடுத்து காமெடி படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு யங் மங் சங் என பெயரிடப்பட்டுள்ளது. சீனா பாஷைபோலிருக்கிறதே என்று கேட்டதற்கு இயக்குனர் எம்.எஸ்.அர்ஜூன் பதில் அளித்தார். அவர் கூறும்போது, 1970 முதல் 87 வரை நடந்த சரித்திர பின்னணி கதையாக இது உருவாகிறது. இதுவொரு ஆக்ஷன் காமெடி கதை. குங்ஃபூ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கிறார். இயக்குனர் தங்கர்பச்சான், பிரபு தேவாவின் தந்தையாக நடிக்கிறார்.
சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் கதை, திரைக்கதை அமைக்க இரண்டு வருடம் ஆனது. பிரபுதேவாவிடம் ஒன்றரை மணி நேரம் கதை கூறினேன். ஒரு வார அவகாசத்துக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள தொடங்கினார்’ என்றார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க பேச்சு நடக்கிறது.