ரஜினி, கமல் எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் பார்க்காத வெற்றி, தோல்வி இல்லை. இதனால், அவர்களை தவிர்த்து தற்போதுள்ள இளம் நடிகர்களில் முதன் முதலாக அவர்கள் திரைப்பயணத்தில் பார்த்து சூப்பர் ஹிட் படம் எது என்பதை பார்ப்போம்.
விஜய்
விஜய் நடித்த செந்தூரப்பாண்டி ஹிட் என்றாலும் அதில் ஹீரோ விஜயகாந்த் தான், விஜய் திரைப்பயணத்தில் தன் அப்பாவின் துணை இல்லாமல் சூப்பர் ஹிட்டாகிய படம் பூனே உனக்காக தான்.
அஜித்
அஜித் நடித்த முதல் படமே ஹிட் என்றாலும், சூப்பர் ஹிட்டாக அவரின் திரைப்பயணத்தில் அமைந்தது ஆசை படம் தான், ஆனால், இந்த படத்தில் இவர் குரல் டப்பிங் என்பது வருத்தம் தான்.
சூர்யா
சூர்யா நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் என ஹிட் மேல் ஹிட் கொடுத்திருந்தாலும், அதில் எல்லாம் விஜய் என்ற நடிகர் இருந்தார், இதை தாண்டி முதன் முதலாக இவர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் உன்னை நினைத்து.
விக்ரம்
விக்ரம் நடித்த முதல் படமே சேது தான் என்று சொல்வார்கள் இன்றைய கால இளைஞர்கள், ஏனெனில் அந்த அளவிற்கு சேதுவின் வெற்றி விக்ரமின் திரைப்பயணத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.
சிம்பு
சிம்பு நடிப்பில் வெளியாகிய பல படங்கள் தோல்வி என்றாலும், அவரை சுற்றிய சர்ச்சையே இவரின் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டே இருந்தது, ஆனால், இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதிய மன்மதன் படமே மெகா ஹிட்டாகி இவரை மேலும் உயர்த்தியது.
தனுஷ்
தனுஷ் தான் நடித்த இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்திலேயே சூப்பர் ஹிட்டை ருசித்தார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியும் பல நாட்கள் ஹீரோக்களின் நண்பர்களாக நடித்தாலும், இவர் ஹீரோவாக நடித்த இரண்டாவது படமான பீட்சாவிலேயே சூப்பர் ஹிட் கொடுத்தார்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை எந்த படமும் தோல்வியடையவில்லை என்றாலும், இவரின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் இவரின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது.
ஜெயம் ரவி
பெயரிலேயே ஜெயம் ரவி அதனால், உங்களுக்கே தெரிந்திருக்கும் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த மக்கள் மனதை கவர்ந்தவர் ‘ஜெயம்’ ரவி.
விஷால்
விஷாலுக்கு என்ன தான் செல்லமே ஹிட் என்றாலும் சோலோ ஹீரோவாக இவர் நடித்த சண்டக்கோழி சூப்பர் ஹிட் மட்டுமின்றி ஆக்ஷன் ஹீரோவாக இவரை உருவாக்கியது