பிரபல நடிகரின் மனைவி விவாகரத்து கேட்டு கதறல்! போலீஸ் புகார்
நகைச்சுவையில் மிக பிரபலமானவர் நடிகர் நாகேஷ். அவரது மகன் ஆனந்த பாபு மீது அவர் தன்னை போன்று வருவான் என நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால் நடந்ததோ வேறு. விதி யாரைத்தான் விட்டு வைக்கவும், நடிப்பில் கைதேர்ந்த நடிகராக இருந்த ஆனந்த பாபுவுக்கு குடிப்பழக்கத்தால் தான் பிரச்சனை பெருகியது.
மது போதைக்கு அடிமையான இவருக்கும் சாந்தி என்பவருடன் 1985 ல் திருமணம் நடந்தது. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
திருமணமாகி சில நாட்களிலேயே சாந்தி சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் திருமணத்திற்கு பின்பு 3 மாதங்கள் மட்டுமே சந்தோசமாக இருந்தேன்.
எங்களை மிகவும் அக்கரையுடன் மாமனார் நாகேஷ் கவனித்தார். நான் தான் அவருக்கு சுமையாக நாம் இருக்க கூடாது என தனியே பிள்ளைகளுடன் இருக்கிறேன்.
அப்படி இருந்தும் என கணவர் எங்களை கவனிக்காமல் அவ்வப்போது வந்து போவார். குடும்பத்தை நடத்தி செல்வதற்காக வேலை செய்தேன்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு வீடு வாங்கினேன். அங்கு நாங்கள் வசித்து வந்தோம். 8 வருடத்திற்கு மேலாக அவர் இங்கே வரவில்லை.
குழந்தைகளுக்குகாக அவரை நான் ஏற்றுக்கொண்டேன். இன்னும் அவர் மாறாமல் இங்கே வந்து எங்களை தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்துகிறார்.
அவர் அப்பா சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டார். எங்களுக்கு எதுவும் தரவில்லை. அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என சாந்தி போலீசில் புகார் கொடுத்தாராம். ஆனால் நாகேஷின் நண்பர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லையாம்.
பின் சில நாட்களில் ஆனந்த பாபு தன்னிலை உணர்ந்து திருந்திவிட்டாராம். மேலும் கிறிஸ்தவ கொள்கைகள் மீது அதீத நம்பிக்கையுடன் இறங்கி விட்டாராம்.
தற்போது இவரின் பிள்ளைகளும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். அப்பாவின் ஆசையை எனது பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.