பிரபல நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ். இவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி திரிபுரம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார்.
தற்போது ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.