பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு கத்தி குத்து: பதற வைக்கும் காரணம்
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்களை கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011 மற்றும் 2014 என இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்று, தற்போது தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் Petra Kvitova இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியின் போது இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக Petra Kvitova, The Hopman கிண்ண தொடரிலிருந்து வெளியேறினார். இதை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவை பதிவிட்ட சில மணிநேரங்களிலே அவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் கத்தியுடன் நுழைந்த திருடன் Petra Kvitova கத்தியால் தாக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில், Petra Kvitovaவின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, Petra Kvitova மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.