அரவிந்த் சாமி நடித்துவரும் ‘நரகாசூரன்’ படம், பிப்ரவரியில் ரிலீஸாகலாம் என்று தெரிகிறது.
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
ரோன் யேதன் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், ஊட்டியில் முடிந்துள்ளது. இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில், அடுத்த ஷெட்யூல் தொடங்க உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து கெளதம் மேனனும் தயாரிக்கிறார்.