பிந்திய போர்த் தளபாடங்களுடன் இத்தாலிய நீர்மூழ்கி போர்க்கப்பல் கொழும்பில்…
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான இத்தாலிய ITS Carabiniereபோர்க்கப்பல் இன்று(11) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
பிந்திய தலைமுறை போர்த் தளபாடங்களும் இராணுவக் கருவிகளும் இந்தப்போர்க்கப்பலில் சிறப்பாக பொருத்தப்பட்டுளமை தொடர்பாக கடற்படையினர் மத்தியில்அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும் மற்றும்கடற்படை இராஜதந்திரம், ஆகியவற்றை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களைஅடிப்படையாக கொண்டு இந்த போர்க்கப்பல் இலங்கை வந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போர்க்கப்பல் எதிர்வரும் 14ம் திகதி வரை கொழும்பில் தரித்து நிற்கும்என்றும் அச்சமயம் இத்தாலிய மாலுமிகளுடன் இணைந்து இலங்கை கடற்படையினர்பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..