சமூக வலைத்தளங்களில் நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது பேஷன் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ள ரகுல் ப்ரீத் சிங் அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் தான் அப்படி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அங்கிருந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க வந்துள்ள மும்பை நடிகைகளும் இந்த விஷயத்தில் பாலிவுட் நடிகைகளின் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘மன்மதடு 2’ தோல்வியடைந்துவிட்டது. தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் மட்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல்.