பாலிவுட்டில் பிரபலமாக திகழும் சோனம் கபூர், பல இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் பேடுமேன் வெளியாக உள்ளது. பால்கி இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், ராதிகா ஆப்தே நடித்துள்ள இப்படத்தில் சோனமும் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனம் கபூர், ஒரு சில இயக்குநர்களின் படங்களின் மீண்டும் நான் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்தவகையில் பால்கி, ராஜ்குமார் ஹிரானி, ராம் மத்வானி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் படங்களில் மீண்டும் நான் நடிப்பேன். இதேப்போன்று சுஜித் சிர்கார், விஷால் பரத்வாஜ் மற்றும் ஸ்மித் அமின் ஆகியோரின் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.