2004ல் சினிமாவுக்கு வந்த காஜல் அகர்வால் 13 வருடங்களாக சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமே அதிகப்படியான படங்களில் நடித்துள்ள அவர், தாய் மொழியான ஹிந்தியில் இதுவரை 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இதுபற்றி காஜல்அகர்வால் கூறும்போது, ஹிந்தியில் எனக்கு அதிகமான படங்களில் நடிக்க ஆசை தான். ஆனால் தமிழ், தெலுங்கில் தான் எனக்கு அற்புதமான படங்களாக கிடைத்து வந்தன. அதோடு, ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்துவது கடினமாகவும் தெரிந்தது என்கிறார் காஜல் அகர்வால்.