பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும். இதற்காக நீதி மன்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வீடன் நாட்டின் Göteborg நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய சமூக உச்சி மாநாடு நிகழ்வின் ஊடகவியலாளர் சந்திப்பில் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். தவிர, முதன் முறையாக மக்ரோன் பாலியல் வன்கொடுமை குறித்து நீண்ட நேரம் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்ரோன் தெரிவிக்கும் போது, ‘இன்று நாம் பாலியல் தாக்குதல்களை மறைத்து வருகிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். இந்த சிந்தனையை மாற்றவேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். அதேவேளை தண்டனையும் அதிகமாக்கவேண்டும். அடுத்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் காரணிகளை களையவேண்டும். இதுவும் ஒரு சமூக சீரழிவுதான்!’ என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றங்கள் இது தொடர்பாக மிக அவதானத்துடன் இருக்கும் படியும் மக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான இன்னும் அதிகமாக பெண்கள் பேசவேண்டும். வெளியில் கொண்டுவரவேண்டும்!’ என மக்ரோன் தெரிவித்துள்ளார்.