பாலத்தில் மோதி நொறுங்கிய விமானம்! முதல் நாளிலேயே நடந்த விபரீதம்
சீனாவில் ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம் புதியதாக நீரிலும், ஆகாயத்திலும் செல்லக்கூடிய விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்து கிழக்கு சீனாவில் இந்த விமானத்தின் சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று விமானத்தின் சேவையை தொடங்கி முதல் ஆம்பியன் விமானம் ஷாங்கயின் ஜின்ஷான் மாவட்டத்திலிருந்து ஜெஜியாங் மாகாணம் ஜோஷான் நகருக்கு 10 பேருடன் புறப்பட்டு சென்றது.
அப்போது. எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பயங்கரமாக மோதியது.
தகவலை அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி வெளியிட்டுள்ளது.