முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதிக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்றைய தினம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். சிறப்புரிமை பிரச்சினை இல்லை என்ற காரணத்தினால் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றால், வேறும் ஓர் தினத்தில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் தாம் ஊடகங்களில் கருத்தை வெளியிடப் போவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமக்கு பிரச்சினை கிடையாது என சபாநாயகர் பதிலளித்துள்ளார்.