பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் தான் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தோல்வியுற்ற நபர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே நாடு இலங்கையாகும்.
தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.