பாதுகாப்பு பெட்டகத்திற்குள் குழந்தைகளின் எச்சங்கள்?.
வினிபெக்-நிறை மாத ஆண்குழந்தைகள் உட்பட்ட ஆறு சிசுக்களின் எச்சங்கள் வினிபெக்கில் ஒரு சேமிப்பு லாக்கரிற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறு குழந்தைகளின் எச்சங்களை ஆராய்ந்த நோயியல் மருத்துவர் இவை நிறை மாத குழந்தைகள் போல் தோன்றுவதாக அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அன்ட்ரியா கிஸ்பிரெச்ட் என்பவர் கைதாகி விசாரனை நடைபெறுகின்றது.
விசாரனையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பெரும்பாலும் உயிருடன் பிறந்தவைகளாக மனிரோபா நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளதாக அறியப்படுகின்றது.
நோயியல் மருத்துவர் றேமன்ட் றிவெரா தான் பரிசோதித்த எச்சங்கள் அனைத்தும் சிதைந்த நிலையிலும் எலும்புகளை விட அதிகமானதுமென நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கீஸ்பிரெச்ட் சேமிப்பு லாக்கர் பணியாளர்கள் ஒக்டோபர் 2014ல் எச்சங்களை கண்டுபிடித்த பின்னர் கீஸ்பிரெச்ட் அவற்றை மறைத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.