எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளைத் தைத்து மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாடசாலை சீருடைகளை தைப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகளை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் மற்றும் விரயத்தைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.