பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர் கலாநிதி ஷாஹிட் அஹ்மத் ஹஷ்மத் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனெரல் டி ஏ ஆர் ரணவக்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.