பாகிஸ்தானுக்கு எதிராக பிரபல இந்திய வீரர் விடுத்துள்ள சபதம்!
மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியா சம்பியன்ஸ் ஹாக்கி கிண்ணத்தில் நிச்சயமாக இந்திய இராணுவ வீரர்களுக்கு ஏமாற்றமளிக்க மாட்டோம் என இந்திய தேசிய ஹாக்கி அணித்தலைவர் ஸ்ரீஜேத் சபதம் செய்துள்ளார்.
உரி தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீஜேத் கூறியதாவது, அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியா ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து இந்திய இராணுவ வீரர்களுக்கு ஏமாற்றமளிக்காது. 100 சதவீத உத்வேகத்துடன் விளையாடி வெற்றிப்பெறுவோம் என உறுதியளித்துள்ளார்.
தற்போது உள்ள பாகிஸ்தான் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. ஆனால், அவர்கள் எந்த நேரத்திலும் எந்த அணியையும் வீழ்த்துவார்கள், அது தான் அவர்களின் சிறப்புதன்மை எனவும் குறிப்பிட்டுள்ளார்.