பாகிஸ்தானின் விஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று தாக்குதல் நடத்தியதில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன.
பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதிகள் ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தக் குழுவுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இந்தநிலையில், கைபர் – பக்துங்கா மாகாணத்திலுள்ள ஒரு வீட்டைக் குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் ஹக்கானி இயக்கத்தின் மூத்தத் தளபதி உள்பட இரண்டு தீவிரவாதிகள் பலியானதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.