பழைமைவாத தலைமை பதவிக்கு போட்டியிடும் முன்னாள் சபாநாயகர்.
கனடா-ஒட்டாவா, சஸ்கற்சுவான் எம்பி அன்ட்றூ ஷியர் கொன்சவேட்டிவ் தலைமை பதவிக்கு போட்டியிடப்போகும் செய்தியை புதன்கிழமை அறிவிப்பார்.
37-வயதுடைய ஷியர் ஒட்டாவாவில் வளரந்தவர். இருமொழிகள் பேசுபவர். 2011முதல் 2015 வரை கீழ் சபையில் சபாநாயகராக இருந்தவர்.
தனது மனைவி மற்றும் தனது ஐந்து பிள்ளைகளில் சிலருடன் இணைந்து கொள்வார். அரசியல் கட்சி குழுவின் அங்கத்தவர்கள் பலரும் தங்கள் ஆதரவை அறிவிப்பார்கள் என எதரிரபார்க்கப்படுகின்றது.
இம்மாத முற்பகுதியில் கீழ் சபை எதர்க்கட்சி தலைமை பதவியை ராஜிநாமா செய்தார்.பதவி விலகுவது தலைமை பதவிக்கு போட்டியிட உகந்ததென தெரிவித்துள்ளார்.