பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்!
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 58.
1970 மற்றும் 80 களில் இவரது நடனத்தை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். இவர் நடிகை ஹேமமாலியின் சகோதரி ஆவார்.
வெள்ளித்திரையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது நடிப்பால் கலக்கி வந்த இவர், சென்னை திநகரில் வசித்து வந்தார்.
சமீபகாலமாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இரத்த புற்றுநோயின் தீவிரம் அதிகரிக்கவே, நேற்று இரவு காலமானார்.
இவரது மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.