“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம்
“பிளைங் கேர்ள்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற சாதனை படைத்தார்.
முதன்முறையாக ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிவரை முன்னேறி 4வது இடம் பிடித்து சாதித்தார் தீபா கர்மாகர். இதனால் இந்த சாதனை மங்கைக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில் திரிபுரா மாநில அரசு அவரைக் கவுரவிக்கும் விதமாக அருங்காட்சியகத்தில் பிரத்யே புகைப்பட தொகுப்பு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கேலரியில் தீபா கர்மாகரின் ஒலிம்பிக் சாகசம் மற்றும் பல அரிய புகைப்படங்களையும் வைக்க திட்டமிட்டுள்ளது.