பருவநிலை மாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிஸ் ஒப்பந்தத்தினை எதிர்வரும் 2030ஆம் ஆண்டினுள் நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டிவருவதாக கனடாவின் சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பிலான அமைச்சர் கத்தரீன் மக்கெனா தெரிவித்துள்ளார்.
எனினும் தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதியை 2030ஆம் ஆண்டினுள் நிறைவேற்றுவதில் தாம் உறுதியாக உள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதனையிட்டு திருப்தி கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பருவநிலை மாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட விடயங்களில் பலவற்றை கனடா இன்னமும் முறையாக பூர்த்தி செய்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டளவில் நச்சு வாயு வெளியேற்றத்தின் அளவினை 583 மொகா தொன் அளவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் அந்த இலக்கினை குறித்த காலத்தினுள் எட்ட முடியும் என்பதனை சந்தேகத்திற்கிடமாகவே வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.