பயிற்சி நேரத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சாரதி பயிற்றுநர்;?
கனடா-ரொறொன்ரோ சாரதி பயிற்றுநர் ஒருவர் பெண் மாணவி ஒருவரை பயிற்சியளிக்கும் போது பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த கோடை காலத்தில் ரொறொன்ரோவில் யூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 19 வயது பெண் ஒருவர் இவரிடம் சாரதி பயிற்சி பெற்றுக்கொண்டார். அக்கால கட்டத்தில் பயிற்சியாளர் குறிப்பிட்ட மாணவியை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரனை நடாத்ததிய பின்னர் 64-வயதுடைய மனிதர் ஒருவரை பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 18ல் கைது செய்தனர்.
இந்நபர் ரொறொன்ரோவை சேர்ந்த சாமுவெல் டிக்சன் எனவும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நபரால் வேறு சிலரும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என பொலிசார் கவலை கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்களை பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற இலக்கத்துடன் அல்லது அனாமதேயமாக குற்றத்தடுப்பாளர்களுடன் 416-222-TIPS (8477).இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.