பன்னீர் செல்வத்தை வற்புறுத்தியதை மறைமுகமாக ஒப்புக்கொண்ட சசிகலா
வற்புறுத்தலின் பேரிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என பன்னீர் செல்வம் கடந்த 7 ஆம் திகதி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இதனை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் விதமாக இன்று சசிகலாவின் பத்திரிகையாளர் சந்திப்பு அமைந்துள்ளது.
இன்று பத்திரிகையாளரிடம் பேசிய அவர், சட்டசபையில் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உங்களுக்கே எங்கள் ஆதரவு, நாங்கள் இருக்கிறோம் என ஓபிஎஸ்ஸிடம் துரைமுருகன் கூறினார்.
ஆனால், அதற்கு ஓபிஎஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் ஆதரவு தேவையில்லை என அவர் கூறியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
எனவே, இதற்கு மேல் விட்டால் சரிவராது என நான் முடிவெடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலைக்கு தள்ளியவர் ஓபிஎஸ்தான் என கூறினார். சசிகலாவின் இந்த பேச்சு என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என ஓபிஎஸ் கூறியதை உண்மையாக்கியுள்ளது.
அவர் தானாக முன்வந்து சசிகலாவை முதலமைச்சராக்க ராஜினாமா செய்யவில்லை என்பது தெளிவாகிறது