பந்து தாக்கி உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்..! குற்றவாளி பெயர் வெளியானது!
கடந்த 2014ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தை பிலிப் ஹியூஸ் சந்திக்க, பந்து ஹியூஸின் கழுத்தில் தாக்க நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிலிப் ஹியூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹியூஸின் மரணம் குறித்து நியூ சவுத்வேல்ஸ் மாகாணம். மைக்கேல் பார்ன்ஸ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஹியூஸைத் தாக்கும் வகையில் திட்டமிட்டு பவுன்சர் வீசப்பட்டதா என்கிற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹியூஸ் மரணத்தில் யாரும் குற்றவாளியில்லை. அவர், தவறாகப் பந்தை கணித்ததே காரணம் என கூறப்பட்டுள்ளது.