வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ‘பத்மாவத்’ திரைப்படத்தை திரையிட ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. படத்தை திரையிட எவ்வித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ள நிலையில், ‘பத்மாவத்’ படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. கர்னி சேனா என்ற அமைப்பு இப்படத்தை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.
அரியானாவின் குருஷேத்ரா பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில், பத்மாவத் திரையிடப்பட உள்ளதை அறிந்த சிலர் அங்குள்ள திரையரங்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். படம் திரைக்கும் வரும்பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், மும்பை மற்றும் அரியானா காவல்துறை தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.