பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜேந்தர்சிங்வுடன் மோதிய பிரான்சிஸ் செகா: பரபரப்பு வீடியோ
டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்சானியா குத்துச்சண்டை வீரர் பிரான்சிஸ் செகா, இந்திய வீரர் விஜேந்தர் சிங்குடன் மோதிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் மோதவுள்ள தொழில்முறை குத்துச்சண்டை போட்டி எதிர்வரும் 17ம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இருவரும் பங்கேற்ற பத்திரக்கையாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதன் போது 34 வயதான தன்சானியா வீரர் பிரான்சிஸ் செகா, விஜேந்தர் சிங்குடன் மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜேந்தர் சிங் கூறியதாவது, எனக்கு எதிராக களத்தில் யார் மல்லுகட்டினாலும் அவரை சாய்ப்பேன். டிசம்பர் 17ம் திகதிக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. பிரான்சிஸ் செகாவை நாக்-அவுட் செய்வேன்’ என கூறியுள்ளார்.
தற்போதைய கண்டங்களுக்கிடேயேயான சாம்பியனான பிரான்சிஸ் செகா கூறுகையில், இந்த போட்டிக்காக நான் கடுமையாக தயாராகி இருக்கிறேன். அவரை வீழ்த்துவதற்கு தயார். இனி விஜேந்தர் சிங் தொழில்முறை குத்துச்சண்டையை பற்றியே அவர் நினைத்து பார்க்க மாட்டார் என கூறியுள்ளார்.