பத்தாவது ஆண்டில் ட்விட்டர்! ஆச்சரியப்படுத்தும் சிறப்புகள்
சமூகவலைதளங்களில் மக்கள் அதிகம் விரும்பும் ஒன்றாக திகழ்கிறது ட்விட்டர்!
ஒரு செய்தியை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் தற்போது தொலைக்காட்சியை நாடுவதை விட சமூக வலைத்தளங்களையே அதிகம் நாடுகிறார்கள்.
2006ல் தொடங்கப்பட்ட ட்விட்டருக்கு இது பத்தாவது ஆண்டாகும். அதன் சிறப்புகளை பற்றி காண்போம்
ட்விட்டரை உருவாக்கியவர் பெயர் ஜாக் டோர்சி.
இவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது,சிறிய குழுவிற்குள் செய்தியை பகிர்ந்து கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் அவருக்கு ட்விட்டர் ஐடியா உருவாகியுள்ளது.
அதன்படி ஜாக் கடந்த 2006ல் மார்ச் மாதம் தனது நண்பர்கள் நோவா ,பிஸ் ஸ்டோன், எவன் வில்லியம்ஸ் ஆகியோருடன் சேர்ந்து ட்விட்டர் தள்த்தை உருவாக்கினார்.
ட்விட்டர் ஆரம்பிக்கும் போது அதற்கு Twttr என பெயர் இருந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து Twitter என பெயர் மாற்றம் பெற்றது.
இன்று பேஸ்புக்குக்கு சமமாக உலக மக்களை ட்விட்டர் கவர்ந்துள்ளது.
2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்விட்டர் நிறுவனம் ஹேஷ்டேக்கை (#) அறிமுகம் செய்தது.
உலகளவில் ட்விட்டர் மூலம் பல நன்மைகள் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ,இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்களும் டிவிட்டரில் உள்ளனர்.
2015-ம் ஆண்டு நிலவரப்படி ட்விட்டர் நிறுவனத்தின் நிகர வருமானம் 52 கோடி டொலர்.
2016-ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3,860
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு அவரின் ட்விட்டர் பிரச்சாரம் பெரும் உதவி செய்தது என்றே கூறலாம்.
அமெரிக்க பாடகரும், பாடலாசிரியுமான கேத்தி பெர்ரிக்கு ட்விட்டரில் அதிகபட்சமாக 94,142,217 பாலோவர்ஸ் உள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புகள் மற்றும் பெருமைகளை கொண்ட ட்விட்டரில், எந்த ஒரு விடயத்தை பற்றியும் வதந்திகள் எளிதாக பரவுவது, ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளின் ஆட்கள் எளிதாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது போன்ற தவறான விடயங்களும் நடைபெறுகிறது என்பதை மறுக்க இயலாது.