இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இத்தொடரில் ஏனைய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகின்றன. அவர்கள் ஏலம் முறையில் ஐபிஎல் அணிகளுக்கு வாங்கப்படுவர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, விளையாடி வருபவரும் வேகப்பந்து வீச்சாளரும் இலங்கை அணியின் வீரருமான லிசித் மலிங்கா ஐபிஎல் உலகில் புது சாதனை படைத்துள்ளார்.
யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன மலிங்கா எதிரணி துடுப்பாட்டக்காரர்களை தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் மிரட்டி வருவார்.
இவரின் அருமையான பந்து வீச்சால் மும்பை அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. அந்த வகையில் மலிங்கா நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் உலகில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
105 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 151 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் 4 முறை 4 விக்கெட்டுகளும் ஒரு முறை 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இவருக்கு அடுத்த வரிசையில் இந்திய அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா 133 விக்கெட்டுகளும், மற்றொரு இந்திய வீரரான ஹர்பஜன் சிங் 127 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.