பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! ஒலிம்பிக் கிராமத்தில் மற்றொரு குத்து சண்டை வீரர் அதிரடி கைது!
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள நமீபியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் 2 பணிப்பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார்.
தற்போது இதேபோல் 22 வயதான நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் பொலிசில் புகார் கொடுத்தையடுத்து அவர் கைதாகியுள்ளார்.
ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜோனாஸ் ஜினியஸ் நமீபியா நாட்டு தேசிய கொடியை ஏந்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.