பணிப்பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற வீரர்! ஒலிம்பிக் கிராமத்தில் பரபரப்பு
ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் பணிப்பெண்களைக் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குத்துச்சண்டை வீரர் பிரேசில் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக 206 நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர்கள் பிரேசில் வந்துள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. மேலும், வீரர்களுக்கு உதவியாக பணிப்பெண்களும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மொராக்கோ நாட்டை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் ஹசன் சாடா (Hassan Saada, 22) மீது 2 பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை சந்தேகத்தின்பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.