முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான வழக்கை பூகொடை நீதவான் நிலுபுலி லங்காபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளார்.
மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.