வடகொரியாவிடம் கறுப்பு பணத்தை செலுத்தி, ஆயுதங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான தகவலை வெளியிட்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், இலங்கை கறுப்பு சந்தையின் ஊடாக வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக பசில் ராஜபக்சவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை இலங்கையின் வெளியுறவு அமைச்சு நிராகரித்திருந்தது. எனினும் நிதியமைச்சர் இந்த தகவலை நிராகரிக்கவில்லை.
இதனையடுத்தே பசில் ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்று ரஞ்சித் மத்தும பண்டார கோரியுள்ளார். கறுப்புப்பணத்தை பயன்படுத்த எவருக்கும் சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சர்வதேச சமூகத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள நாடு ஒன்றுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள இலங்கை மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]