பங்களாதேஷின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சீதகுண்டா பகுதியில் உள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 450 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில். இதுவரை 35 சடலங்கள் சட்டகிராம் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரசாயன எதிர்வினை காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், வெடிப்பைத் தொடர்ந்து தீ பரவி வருவதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.