பங்களாதேசில் இடம்பெற்ற பயங்கர தாக்குதலின் பின்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் காவலில்.
கனடா-பங்களாதேஷ் டாக்காவில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பயங்கர தாக்குதலை தொடர்ந்து ரஹ்மிட் ஹசிப் கான் என்பவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
கான் டக்காவில் பிறந்தவர் தற்சமயம் உலகளாவிய சுகாதார கல்வியை ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருக்கின்றார்.
கடந்த சனிக்கிழமை பங்களாதேஷ் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பயங்கரமான தாக்கதலின் பின்னர் பணயக்கைதியாக வைக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பொலிசார் அதிரடியாக பேக்கரிக்குள் நுழைய முன்னர் தாக்குதல் காரர்கள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் தாக்குதல் காரர்களில் ஆறுபேர்களை கொன்று விட்டனர்.
பணயக் கைதிகளில் 20பேர்கள் தாக்குதலின் போது கொல்லப்பட்டு விட்டனர்.
மத ரீதியான போக்கில் பார்க்கையில் இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் இது மிகவும் வன்முறையானதென கூறப்படுகின்றது.
பணயக்கைதிகளில் சிலர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் இவர்களிடம் விசாரனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்த மேலதி விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.
அனாமதேயமாக கிடைத்த தகவலின் பிரகாரம் ஐந்து பேர்களின் பின்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் குறித்து விசாரனை இடம்பெறுவதாகவும் கானும் இவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 72மணித்தியாலங்களிற்கும் மேலாக கான் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கனடியர்கள் கானை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கென உருவாக்கப்பட்ட Free Tahmid Facebook group பக்கத்தில் பலர் சேர்ந்து கானை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர்.