ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான புதிய தூதராக நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் தீவிரவாதிகள் தாக்கப்பட்ட மலாலா யூசப்சாயிற்கு கடந்த 2015-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
நோபல் பரிசை பெற்றதை தொடர்ந்து சர்வதேச அளவில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் மலாலா யூசப்சாய் பெண் கல்விக்காக பெருமளவில் நிதி திரட்டி வருகிறார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சாபையின் அமைதிக்கான புதிய தூதராக மலாலா யூசப்சாய் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அவருக்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளரான ஆண்டினியோ குட்ரோஸ் பதவி பிரமானம் செய்து வைக்கிறார்.
இதன் மூலம் ஐ.நா சபையின் மிக இளவயது அமைதிக்கான தூதராக மலாலா யூசப்சாய் பதவி வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.